Map Graph

மதுரை நவநீத கிருஷ்ணன் கோயில்

மதுரை நவநீத கிருஷ்ணன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் மதுரை நகரில் வடக்கு மாசி வீதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வடபகுதியில் இக்கோயில் அமைந்துள்ளதால் 'வடக்கு கிருஷ்ணன் கோயில்' என்ற இன்னொரு பெயரும் உண்டு. இக்கோயிலில் சுமார் 38 அடி உயரம் கொண்ட, தமிழ்நாட்டிலேயே உயரமான வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறுதல் போட்டி, ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இக்கோயிலில் நவநீத கிருஷ்ணன் உலா வரும் பூப்பல்லக்கு, ஆசியாவிலேயே நீளமானது என்ற சிறப்பு வாய்ந்தது.

Read article